சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் 32 லட்சம் மதிப்புள்ள ஆப்பிளை நாசரிடம் கொடுத்து விற்று தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது நாசர் விற்பனை செய்த ஆப்பிள்களுக்கு 6 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 26 லட்ச ரூபாய் பணத்தை நாசர் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து ராஜேஷ் குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த நாசரை அதிரடியாக கைது செய்தனர்.