தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதை அரசு உறுதி செய்து வருகின்றது. ஒரு ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளி மற்றும் இரண்டு ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள் போன்ற பள்ளிகளில் தேவையான நடவடிக்கைகள் மூலமாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் இதற்கு முன்னதாக ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக வழிமுறைகள் விரைவில் கடைபிடிக்கப்பட்டு மொத்தம் 1500 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூறப்படுகிறது.