இந்திய அரசாங்கம் கடன் பத்திர வெளியீடுகள் மூலம் 6.55 டிரில்லியன் ரூபாய் கடன் பெறுவதற்கான தனது திட்டங்களை தக்க வைத்துக் கொண்டது. இதற்காக 50 ஆண்டு வரம்பு நிறைவு கொண்ட புதிய பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த சந்தை கடன் 15.43 ட்ரில்லியன் ரூபாயாக இருக்கும் என்று கணித்துள்ளது.

இது 3, 5, 7, 10, 14, 30 மற்றும் 40 ஆண்டுகள் வரம்பு நிறைவு கொண்ட பத்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் இந்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐம்பது ஆண்டு பத்திரத்தின் மூலம் 300 மில்லியன் ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.