கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.கொளக்குடி கிராமத்தில் இளங்கோவன்-மணிமேகலை தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூமிகா என்ற 24 வயது மகள் இருந்துள்ளார்.  இதில் இளங்கோவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மணிமேகலை கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூமிகா தன்னுடைய சகோதர சகோதரிகளுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் பூமிகா கடந்த 5 வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால் பூமிகா கர்ப்பமானார்.

தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும பூமிக்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்ட நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் பூமிகா மிகவும் மன வேதனை அடைந்த நிலையில் கேரளாவில் தன் தாய் இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு சென்றும்  பூமிகா மிகுந்த மனவேதனையில் இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.