
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது அஜித் திரிஷா நடிப்பில் ரிலீசான குட் பேட் அக்லி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைப் திரைப்படம் ஜூன் மாதம் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தக் லைப் படத்தின் ஜிங்குச்சா பாடல் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது.
அதன் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பட குழுவினர் பங்கேற்றனர். இதனையடுத்து கமல், சிம்பு, திரிஷா மூவருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
— khvideos (@khvideos3) April 18, 2025
அப்போது த்ரிஷாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமணம் எப்போது என்ன கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த திரிஷா, திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நடந்தாலும் ஓகே. நடக்கவில்லை என்றாலும் ஓகே என கூறியுள்ளார். அவரை கலாய்க்கும் விதமாக கமல்ஹாசன் பேசியிருப்பார். இதோ அந்த வீடியோ..