நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதே போல தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதி உள்ள கடிதத்தில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதால் கூடுதலாக ஹெலிகாப்டர்களை வழங்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

1871 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மழை பெய்து இருக்கிறது. எனவே 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  அவர்களுக்காக உடனடியாக கூடுதலாக ஹெலிகாப்டர்கள் தேவை என்று சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களும், நேவியினுடைய 2  ஹெலிகாப்டரும்,  கோஸ்கார்டின் 2  ஹெலிகாப்டரும் என மொத்தம் 8 தான் இருக்கு. எனவே கூடுதலாக ஹெலிகாப்டர் வேண்டும் என சொல்லி பாதுகாப்புத்துறை அமைசர்க் ராஜ்நாத் சிங்கிற்க்கு கடிதம் எழுதி உள்ளார்.