நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடும். இதனால் வியாபாரிகள் லாரி, சரக்கு வாகனம் போன்ற வாகனங்களில் மாடுகளை ஏற்றி வந்து விற்பனை செய்வார்கள். இந்நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விதிமுறைகளை மீறி உணவு, தண்ணீர் இல்லாமல் மிகவும் நெருக்கமாக அடைத்துக் கொண்டு மாடுகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. நான்கு லாரிகளில் 78 மாடுகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர்களான குணசேகரன், ஜபருல்லா, முஹம்மது, அப்துல் அஜீஸ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.