அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் ஃபைசர், இந்தியாவில் மருந்துகளை உற்பத்தி செய்கிறது. குஜாராத் வதோதரா பகுதியில் ஃபைசர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையானது அமைந்திருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருந்தில் தரக் குறைபாடு கண்டறிந்ததால் இந்த ஆலையிலிருந்து உற்பத்தியான 4 மருந்துகளை விற்பனை செய்யவேண்டாம் என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதாவது, மேக்னஸ், சைசோன், மேக்னமைசின், மேக்னஸ் ஃபோர்ட் ஆகிய 4 உயிர்காக்கும் மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி ஃபைசர் கேட்டுக்கொண்டு உள்ளது. குஜராத்தில் ஆஸ்ட்ரல் ஸ்டெரிடெக் ஆலையில் உற்பத்தியின் போது ஏற்பட்ட தரக் குறைபாடு காரணமாக இந்த 4 மருந்துகளுக்கும் தற்காலிகமாக தடைவிதிப்பதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.