தமிழகத்தில் வருகிற மார்ச் முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு துவங்கவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கப்பட உள்ளது. பாட வாரியாக தேர்வு கால அட்டவணை வெளியாகி இருப்பதை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இதனிடையே பெரியார் பல்கலையில் அமைந்துள்ள கலைஞர் ஆய்வு மையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பணியை துவங்கிவைத்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. தற்போது 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தால் அதனை ஏற்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு மாநில கல்விக்கொள்கையை வகுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை கட்டாயம் படிக்கவேண்டிய மொழி எனவும் கூறியுள்ளார்.