இந்தியாவில் மிகப்பெரிய அரண்மனை ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ளது. உமைத் பவன் எனும் இந்த அரண்மனையின் கட்டுமானப் பணி, 1929-ல் தொடங்கி 1943-ல் நிறைவடைந்தது. 26 ஏக்கரில் 347 அறைகள், நூலகம், நீச்சல் குளம், ஸ்பா, 4 விளையாட்டு மைதானங்களை உள்ளடக்கி பிரம்மாண்டமாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. மேற்கத்திய தொழில்நுட்ப உத்திகள் மற்றும் இந்திய கலை நயத்தையும் கலந்து அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.

347 அறைகளைக் கொண்ட இந்த அரண்மனை முன்னாள் ஜோத்பூர் அரச குடும்பத்தின் முக்கிய இல்லமாகும். அரண்மனையின் ஒரு பகுதி ஒரு அருங்காட்சியகம். மேற்கத்திய தொழில்நுட்பம் மற்றும் இந்திய கட்டிடக்கலை அம்சங்களின் கலவையாக இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. [