
பூனேவில் வசிக்கும் தம்பதிக்கு மூன்று வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுவன் அந்த பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இரண்டு குடும்பத்தினரும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். அந்த சிறுவனை சிறுமிக்கு அண்ணன் போல் குடும்பத்தினர் கருதி வந்தனர். ஆனால் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரம் சிறுவன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது தான் சமூக வலைதளம் பார்த்து இந்த தவறை செய்ததாக சிறுவன் கூறியுள்ளான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.