திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போ சிஏஜி அறிக்கை. அது என்ன நம்முடைய அமைப்பா அது ? சிஏஜி என்றால் என்ன ? கண்ட்ரோலர் ஆடிட் ஜெனரல் ஆப் இந்தியா. இவங்களுடைய பணி மத்திய – மாநில அரசுகள் உடைய நிதி சுமையை தணிக்கை செய்வது. அறிக்கை வெளியிட்டு இருக்காங்க. ஒன்பது ஊழல் வெளியே வந்திருக்கு. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல்.துவாரகா விரைவு சாலை அப்படின்னு ஒரு திட்டம். அதுல ஒரு கிலோ மீட்டர் ரோடு போடறதுக்கு எவ்வளவு தெரியுமா செலவு கணக்கு காட்டி இருக்காங்க…

ஒரு கிலோமீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு. நான் சொல்லலைங்க சிஏஜி ரிப்போர்ட் சொல்லுது.. கிலோமீட்டருக்கு 18 கோடி அனுமதி கொடுத்து, அதை சிக்ஸ்வே.. ஆறு வழி சாலை என மாற்றி காட்டி, கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோடு போட்டதற்கு செலவு செஞ்சு இருக்குது இந்த ஒன்றிய பாஜக அரசு.

பாஜக அரசை  எப்படியாவது தகர்த்தெறிய வேண்டும் என்று 28 இயக்கங்கள் ஒன்று கூடி இருக்கு. ”இந்தியா” கூட்டணி. நம்முடைய இந்தியா வெல்லனும்னா… இந்தியாவை காப்பாற்றனும்னா.. இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

எப்படி சட்டமன்றத் தேர்தல்ல….  2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீங்க. அடிமைகளை ஓட ஓட விரட்டி அடிச்சீங்க.  இப்போ நமக்கு இன்னொரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அடிமைகளையும்  இல்ல…  அடிமைகளோட சேர்த்து….  அடிமைகளோட ஓனர்ஸ்… எஜமானர்கள்… ஒன்றிய பாசிச பாஜகவையும் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என பேசினார்.