கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலை துருகம் சாலைகளில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகனங்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் காவல்துறை சார்பில் சாலையோரம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தடுப்பு கட்டிக்கு வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பு கட்டைகளுக்கு வெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்ல முயன்ற 10 ஆட்டோக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிளிடம் “இனி சாலை விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த மாட்டோம்” என மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் வாகனங்களை கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.