சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ.25க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட், ரூ.100க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருளான பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், சிலர் பால் பாக்கெட்டுகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்சியடைந்துள்ளனர்.