மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள்  ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையி 2047ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் அல்வா கிண்டியுள்ளதாக அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார்.

பட்ஜெட் குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்ட அவர், “இந்தியாவில் வேலை வாய்ப்பைப் பெருக்க, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக்கொண்டே போவது தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை” என தெரிவித்துள்ளார்