உலக நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகியவை இதில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவை நோக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக சுற்றுலா பயணிகளிடமிருந்து 6 கோடி ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது