2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து நேற்று அன்புமணி பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் திமுக கச்சத்தீவை மீட்போம் என வாக்குறுதி அளிக்கும். ஆனால் நிறைவேற்றாது.

அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக தவிர்த்து, பிற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றார்.
தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமாகா, தமமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.