உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டில் வெளியான வாட்ஸ் அப்பில் 7 சூப்பரான அப்டேட்டுகளை இதில் பார்க்கலாம்.

ஒரே whatsapp அக்கவுண்ட் வெவ்வேறு டிவைஸ்களில் பயனர்கள் பயன்படுத்தும் வசதியை சமீபத்தில் கொண்டு வந்தது. தற்போது எப்படி whatsapp வசதியை நாம் பயன்படுத்துகிறோமோ அதனைப் போலவே நாம் ஒரு வாட்ஸ் அப்பை பல்வேறு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்.

செட்டிங்ஸ் சென்று லிங்க் டு எக்ஸ்சிஸ்டிங் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து க்யூ ஆர் கோடை முதன்மை வாட்ஸ் அப் உள்ள டிவைஸிலிருந்து ஸ்கேன் செய்து நான்கு வெவ்வேறு டிவைஸ்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும்.

அதனைப் போலவே சாட் லாக் வசதி மூலமாக குறிப்பிட்ட நபரின் சாட்டை மட்டும் நீங்கள் லாக் செய்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் யாருடைய சார்ட்டை லாக் செய்ய விரும்புகிறீர்களோ அவரின் ப்ரோபைல் பக்கத்திற்குச் சென்று ஸ்க்ரோல் டவுன் செய்து சார்ட் லாக் ஆப்ஷனை enable செய்ய வேண்டும்.

வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பிய மெசேஜை ஹோல்டு செய்த பிறகு 3 டாட் மெனுவை கிளிக் செய்து அதில் எடிட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் எடிட் செய்ய வேண்டிய மெசேஜை எடிட் செய்து கொள்ளலாம். ஆனால் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடத்திற்கு மட்டும்தான் இந்த வசதி உங்களுக்கு செயல்படும்.

தற்போது வரை வாட்ஸ்அப் மூலமாக யாருக்காவது போட்டோக்களை அனுப்பும் பட்சத்தில் அதன் தரம் சற்று குறைவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தற்போது வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டின் படி அப்லோட் குவாலிட்டி என்ற செட்டிங் சென்று பெஸ்ட் குவாலிட்டி என்பதை தேர்வு செய்வதன் மூலமாக வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் புகைப்படங்கள் முடிந்த அளவு அதிக குவாலிட்டியில் பயனர்களுக்கு அனுப்பப்படும்.

வாட்ஸ் அப் யூஸர்கள் whatsapp மூலமாக வீடியோவை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்றால் தேவையான அளவு வீடியோவை ரெக்கார்ட் செய்வது வரை ரெக்கார்டு பட்டனை அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வீடியோவை ரெக்கார்ட் செய்வதற்கு தனியாக ஒரு வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டின் படி வாய்ஸ் ரெக்கார்டு செய்து அதனை ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம். இதற்கு whatsapp ஸ்டேட்டஸ் டேபிளை கிளிக் செய்து அதில் பென்சில் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். தற்போது திரையில் தோன்றும் மைக்ரோபோனை கிளிக் செய்து வாய்ஸ் ரெக்கார்டு செய்து அதனை ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம்.

whatsapp ஸ்டேட்டஸ் நீங்கள் பதிவிடும் போது அதன் இமேஜை தற்போது மற்றவர்களால் பார்க்க முடியும். தற்போது ஸ்டேட்டஸ் லிக்கை கிளிக் செய்யும் மற்றவர்கள் நீங்கள் எதைப் பற்றி லிங்கை ஷேர் செய்து உள்ளீர்கள் என்பதை தோராயமாக அறிந்து கொள்ளலாம்.