நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும். யுபி.ஏ கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி, நம்முடைய நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்த்துக் கொள்ளலாம் என்று இவர்கள்  நினைக்கின்றனர்.ஆனால்  காங்கிரஸின்  கூட்டணி கட்சிகள்…  காங்கிரஸின் நண்பர்கள் தமிழ்நாட்டிலே ஆட்சியில் இருக்கும் ஒரு மந்திரி 2நாளுக்கு முன்பாக என்ன சொன்னார் என்றால்?

தமிழ்நாட்டின் அரசின் ஒரு அமைச்சர் சொல்லி இருக்கின்றார். இந்தியா என்பதை நாங்கள் மதிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்… அவர்களை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லவே இல்லை.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நான் இங்கு கர்வத்தோடு சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு தேசபக்தியின் முழக்கம் வெளிவந்த பகுதி தமிழ்நாடு. எந்த ராஜ்யத்தில் இருந்து ராஜாஜி வந்தாரோ… காமராஜர் வந்தாரோ…  எம்ஜிஆர் வந்தாரோ…

எந்த மாநிலத்தில் இருந்து அப்துல் கலாம் வந்தாரோ அந்த தமிழ்நாட்டை இவர்கள் இந்தியாவிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். உங்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட நபர்கள்  இருக்கும் போது, நாட்டின் இருப்பையே சந்தேகபடுகின்ற உங்களுடைய வண்டி எங்கே செல்லும் என்று புரியவில்லை என தெரிவித்தார்.