
ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் நடந்த இந்த திகிலூட்டும் கொலை சம்பவம் பகுதியினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருவர் தூக்கிட்டு உயிரிழந்ததாக முதலில் தகவல் கிடைத்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது இது தற்கொலை அல்ல, கொலை என்பதை உறுதி செய்துள்ளனர். 14 வயது ஆகாஷ் மொஹந்தி, 9 வயது பிகாஷ் மொஹந்தி ஆகிய இரண்டு சிறுவர்களும், தந்தையின் இரண்டாவது திருமணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக தெரியவந்தது. இதனை எதிர்க்க முடியாத தந்தை, தனது தாயின் உதவியுடன், சிறுவர்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டது போல் காட்ட, கூரையில் தூக்கில் தொங்கவிட்டது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஒரு தந்தை தனது சொந்த குழந்தைகளை இவ்வாறு கொடூரமாக கொன்றுவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாய் உயிரிழந்த பிறகு சிறுவர்கள் தந்தையுடன் இருந்து வந்த வாழ்க்கை எப்படி இருந்தது? எந்த மன அழுத்தம் இவர்களை தாக்கியது? என்பன குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ள பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான முக்கியமான செய்தியை முன்வைக்கிறது.