தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் நாய் சேகர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் முன்னணி இரவுகளுடன் சேர்ந்து படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் சந்தானம் பற்றிய ஒரு வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சந்தானம் புதுவிதமான கெட்டப்பில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சாமி தரிசனம் என்று செய்தி போட்டு வீடியோ வந்தது.

அந்த வீடியோவில் முதலில் சந்தானத்தை காட்டாமல் ஒரு பெண்மணியை காண்பித்தனர். சிறிது நேரம் கழித்துதான் சந்தானம் காண்பிக்கப்பட்டார். இந்த வீடியோவை பார்த்த நிலையில் முதல் 10 வினாடிகள் நடிகர் சந்தானத்தை புதுவிதமான தோற்றத்தில் என்று சொன்னவுடன் குழம்பி விட்டதாக சதீஷ் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.