தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகிறது. ஆனால் அதனை கீர்த்தி சுரேஷ் தரப்பு மருத்துவர் நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் காதலித்து வருவதாக தகவல் வெளிவந்தது. ஆனால் அதனை கீர்த்தி சுரேஷின் தந்தை மறுத்தார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர் ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இருவரும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் முன்னதாக இவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றினை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நிலையில் காதலரா என்று பலரும் கேட்டதால் பின்னர் அவர் தன் நண்பர் என்று அதற்கு விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.