அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோம் கம் என்ற 20 வயது வாலிபர் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த நிலையில் ஒரு 15 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்.

இவர்கள் இருவரும் பழகி வந்த நிலையில் அது நாளடைவில் காதலாக மாறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததால் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனால் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.