பிறந்து வெறும் 15 நாட்களே ஆன தன் பிஞ்சு மகனை முதன்முறையாக வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் நெஞ்சோடு அணைத்து அரவணைக்க வேண்டும் என்ற அந்தத் தந்தையின் பேர ஆசை, ஓடும் ரயிலுக்குள் கண்முன்னேயே அரங்கேறிய கொடூர மரணத்தால் அடியோடு தகர்ந்து போயுள்ளது.
மேலும் காய்ச்சலால் துடித்த அந்தப் பிஞ்சு உயிரைக் காப்பாற்ற வழியின்றி, கையில் பணமும் இன்றி, ஓடும் ரயிலில் தந்தையின் கண்களுக்கு முன்னாலேயே அந்த 15 நாள் குழந்தை மூச்சற்றுப் போன சம்பவம், மனித குலத்தையே உலுக்கும் பேரவலமாக மாறியுள்ளது.
எந்தக் தந்தையாலும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத, தாங்கிக் கொள்ள முடியாத இந்த நெஞ்சைப் பிளக்கும் துயரம், இந்திய ரயில்வேயின் மருத்துவ வசதிகள் மற்றும் அவசர கால உதவியின் லட்சணத்தை மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.
தன் மனைவியையும் பிறந்த குழந்தையையும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் மகிழ்ச்சியான பயணமாகத் தொடங்கிய அந்த ரயில் பயணம், சில மணி நேரங்களிலேயே பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. ஓடும் ரயிலில் குழந்தைக்கு திடீரெனக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல் நடுங்கியுள்ளது.
அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறங்கி மருத்துவமனைக்கு ஓடலாம் என்ற எண்ணத்திலோ அல்லது வழியிலேயே ஏதேனும் மருத்துவ உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ அந்தத் தந்தை கதறியுள்ளார். ஆனால், அந்தப் பிஞ்சு உடலால் அந்த அசுரக் காய்ச்சலைத் தாங்க முடியாமல், தன் தந்தையின் மார்பிலேயே பரிதாபமாக உயிரை விட்டுள்ளது.
15 நாட்கள் மட்டுமே இந்த உலகத்தைப் பார்த்த அந்தச் சின்னஞ்சிறு உயிர், தன் தந்தையின் கையிலேயே ஜடமாக மாறிய காட்சி பார்ப்போரின் ரத்தத்தைக் உரைய வைத்துள்ளது. தன் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அந்த ஏழைத் தந்தை, இறுதியில் தன் குழந்தையின் சடலத்தைச் சுமந்து கொண்டு கண்ணீர்க் கடலில் மூழ்கியபடி வீடு திரும்ப வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர காலங்களில் ரயில்களில் முறையான முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காததே இதுபோன்ற பிஞ்சு உயிர்களின் மரணத்திற்குக்காரணமாக அமைவதாகப் பயணிகள் அழுது புலம்புகின்றனர். சோசியல் மீடியாவில் தீயாகப் பரவி வரும் இந்த நெஞ்சை உருக்கும் செய்தி, லட்சக்கணக்கான நெட்டிசன்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளதோடு, ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
