இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நெருங்கி வரும் நிலையில், டாஸ் வியூகம் குறித்து கிரிக்கெட் ஆய்வாளர்கள் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். டாஸ் வென்ற அணிக்கு சாதகமான சூழல் என நினைத்தால், கடந்த 12 உலகக் கோப்பை போட்டிகளின் புள்ளி விவரங்கள் படி உலகக் கோப்பையில் 8 முறை டாஸ் இழந்த அணி வெற்றி பெற்றுள்ளதாகவும், டாஸ் வெற்றி பெற்றவர்கள் 4 முறை மட்டுமே வென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது, அந்த இரண்டு வெற்றிகளிலும் இந்தியா டாஸ் இழந்தது. இன்று இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தியா டாஸ் வென்று, இந்த அசாத்திய நடைமுறையை மாற்றுமா ? அல்லது டாஸ் – ஐ இழந்து இந்த அசாத்திய நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் உலக கோப்பையை தட்டிச் செல்லுமா ? என நெட்டிசன்கள் இது குறித்து இணையத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.