இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிறிது நேரத்தில்   அது சரி செய்யப்படும்.‌ ஆனால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சுமார் 12 நாட்கள் வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம் அது உண்மைதான். அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. அதாவது அந்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 12 நாட்களாக  போக்குவரத்து நெரிசல் நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் உணவின்றி தண்ணீர் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

அதாவது மங்கோலியாவில் இருந்து பெய்ஜிங்கிற்கு நிலக்கரி மற்றும் கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதோடு பெய்ஜிங் மற்றும் தீபத்தை இணைக்கும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது‌. அந்த சமயத்தில் ஒவ்வொரு வாகனமும் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்ததோடு, சில வாகனங்கள் 5 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நின்றது. இதைத்தொடர்ந்து லாரிகளை இரவில் திசை திருப்பியதன் மூலம் 12 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் அதன்படி ஆகஸ்ட் 26 ஆம் தேதி போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.