
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் பல தடைகளை தாண்டி எடுக்கப்பட்டது. சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தை இடம்பெற்ற சவதீகா பாடல் ரிலீஸ் ஆகிய மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் கல்யாணம் மாஸ்டர் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது சவதீகா பாடல் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு 102 டிகிரி காய்ச்சல். இருமி கொண்டே இருந்தார்.
எல்லோரும் அவரை ஓய்வெடுக்குமாறு கூறினோம். ஆனால் 40 டான்ஸர்கள் இருக்காங்க. இத்தனை டெக்னீசியன்கள் பாதிக்கப்படக்கூடாது. நான் அரை மணி நேரத்தில் வருகிறேன் என கூறினார். அதன் பிறகு மாத்திரை போட்டுக் கொண்டு வந்து சவதீகா பாடலுக்கு டான்ஸ் ஆடினார் என கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார்.