அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபுரிஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புனித நீர் எடுத்துவரப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நேற்று காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடு தொடங்கியது.

9:30 முப்பது மணிக்கு தமிழ் முறைப்படி மேல் சிவச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார மக்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.