
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் இருந்து விலகப் போவதாக ஏற்கனவே அறிவித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு பிரபல நடிகரான அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது அஜித் கூறியதாவது, எனக்கு அரசியலில் லட்சியம் எதுவும் கிடையாது. ஆனால் என் சக நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதை பொறுத்தவரை, அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். இது 100 % துணிச்சலான முடிவு. நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என மறைமுகமாக விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.