நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதி முடித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநில அரசானது பொதுத் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணத்தை இந்த வருடமும் வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக மாநிலம் முழுவதும் இருந்து 78 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மாநில கல்வி அமைச்சர் பிரேம்சாய் சிங் கொடியசைத்து மாணவர்களின் ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார்.

பயணத்தின்போது மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. 10, 12 வகுப்பு பொதுத்தேர்வில் முன்னிலையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுடன் ஊக்கத்தொகையும் வழங்கி அம்மாநில அரசு அவர்களை கௌரவப்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இத்திட்டம் பலர் மத்தியில் வரவேற்கப்பட்டு உள்ளது.