சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆனந்த் யாதவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகிறது. இவருக்கு கல்யாணம் ஆகி 10 வருடத்திற்கு மேலாக குழந்தை இல்லை. இதனால் ஆனந்த் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோசியக்காரரிடம் தனக்கு குழந்தை இல்லாதது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோசியர் குழந்தை பிறக்க வேண்டுமெனில் ஒரு கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த ஜோசியக்காரர் பேச்சைக் கேட்டு ஆனந்தும் ஒரு கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்க அது தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதில் ஆனந்த் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் தொண்டையில் சிக்கியிருந்த கோழிக்குஞ்சை மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இது போன்ற மூடநம்பிக்கைகளை நம்பி யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.