ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சியில் (புஷ்கர் மேளா), சுமார் ₹21 கோடி மதிப்புள்ள ஒரு எருமை மாடு, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக மதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த இந்த எருமை மாடு, கண்காட்சிக்குச் சிறப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டது. எருமையின் உடல்நிலை மோசமடைந்த தகவலையடுத்து, கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து உடனடி சிகிச்சை அளித்தும், அதன் அதிக எடை மற்றும் வேகமாக மோசமடைந்த உடல்நிலை காரணமாகக் காப்பாற்ற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)

“>

இருப்பினும், இந்த எருமை திடீரென இறந்ததற்குக் காப்பீட்டுப் பணத்திற்காக விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பல சமூக ஊடகப் பயனர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்