
கடந்த 1986 ஆம் வருடம் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இந்த படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர்தான் ஷிஹான் ஹூசைனி. இவர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்திலும் நடித்திருந்தார் . அதன் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டர் ஆவார். இவர் 300-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார் .
இந்த நிலையில் இவர் குறித்து பேசிய கலா மாஸ்டர், “இன்று காலை எழுந்தவுடன் ஹுசைனி இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும் எனக்கு கவலையாக உள்ளது. அவர் என்னுடைய மாணவன். நான் ஆரம்ப காலத்தில் அவருக்கு நிறைய உதவி செய்தேன். அவர் எனக்கு ஏதாவது என்றால் உடனே ஓடி வருவார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரை பார்ப்பதற்காக நான் கேட்டேன். ஆனால் தொற்று ஏற்பட்டுவிடும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் அவருக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் காதில் மந்திரத்தை சொன்னேன். நான் உங்களுக்காக நீங்கள் கடைசியாக கேட்டதை செய்தேன்.. மிஸ் யூ என்று கண்ணீருடன் பேசி உள்ளார்.
View this post on Instagram