கோவை மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டையை சேர்ந்தவர் தான் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன். இவர் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்து உள்ளார்.

இந்த நிலையில் டி.டி.எப் வாசன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்க இருக்கிறார். இவர் புது படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி டி.டி.எப்.வாசன் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.