இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10 நாட்களைக் கடந்து போர் நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து இருந்து தரப்பினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்ட போது இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் டெஸ்லா கார் மூலமாக உயிர் தப்பியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் காரில் இருந்த போது அதன் டேங்கரை குறி வைத்து ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால் அது எலக்ட்ரிக் கார் என்பதனால் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார். அதே காரில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தனது அடுத்த டெஸ்லா கார் வாங்குவது பற்றி யோசித்ததாகவும் கூறியுள்ளார்.