பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் நேற்று யூரோ கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் – பெல்ஜியம் மோதின. இந்த போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு வெளியே சில ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தபோது ஒரு பயங்கரவாதி பைக்கில் வந்து ஏகே 47 ரக துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் தகுதிச்சுற்று ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டவன் என்றும் தாக்குதலுக்கு பின் ஃபேஸ்புக்கில் காணொளியை வெளியிட்டதும் தெரியவந்தது. அந்த காணொளியில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதி அரபு மொழியில் கடவுளின் பெயரால் இரண்டு பேரை கொன்று விட்டதாக கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.