உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாநிலத்தில் உள்ள சித்தாரத் நகரில் சியாம்ராஜ் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவ மாணவிகள் ஸ்கூல் பீஸ் கட்டவில்லை. இதன் காரணமாக பள்ளியின் பிரின்சிபல் மாணவ மாணவிகளை சாலையில் அதுவும் வெயிலில் அமர வைத்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து ஸ்கூல் பீஸ் கட்டவில்லை எனில் உங்கள் குழந்தைகளுக்கு இதுதான் நிலைமை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரின்சிபல் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் வேதனையுடன் இருந்த சம்பவத்தை பிரின்சிபல் கொடூரத்தனமாக வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பி வைத்து மிரட்டியுள்ளார். அதோடு கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனில் இந்த முறை மன்னிப்பேன் இனிமேல் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.