
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ஷாம் 2001 ஆம் ஆண்டு 12 திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதனிடையே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஷாம் கடைசியாக வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார்.
தற்போது ஷாம் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் ‘அஸ்திரம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்த ட்ரெய்லர் வீடியோவை விஷால், ஆர்யா, சரத்குமார், விஜய் சேதுபதி, அருண் விஜய், யோகி பாபு ஆகியோர் தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.