கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த வகையில் ஒரு நிதி நிறுவனத்தில் ‌வேலை இருப்பதாக கூறி இருவரையும் ஈரோட்டுக்கு வருமாறு சரண் அழைத்துள்ளார்.

அவர்கள் இருவரும் கோபிக்கு பேருந்தில் வந்த நிலையில் வாலிபரின் மனைவியை மட்டும் தன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஆளில்லாத இடத்தில் பைக்கை நிறுத்தி  அந்த பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் தன் கணவரிடம் அழுது கொண்டே கூறிய நிலையில், இதைக் கேட்டு கணவர் அதிர்ச்சியடைந்தார். இந்த தொடர்பாக கோபிகாவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரியின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தரணை கைது செய்துள்ளனர்.