திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்ப்பட்டி பகுதியில் சிவகுமார் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கட்டிட வேலைக்காக அழைத்து அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதோடு சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தன் வீட்டை வேறு கிராமத்திற்கு மாற்றியுள்ளார்.

இருப்பினும் அங்கு வந்தும் சிவக்குமார் தொடர்ந்து சிறுமியுடன் பழகியுள்ளார். இந்நிலையில் சிறுமி திடீரென வயிறு வலிப்பதாக தன் தாயாரிடம் கூறிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.