சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதில் கோகுல் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6), க்ரிஷிகா (1) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோபத்தில் தன் கணவரை ஷில்பா தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த கோகுல் தன் பெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஒரு மாதமாக ஆட்டோ ஓட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து ஷில்பா தன் கணவரிடம் வீட்டிற்கு வாருங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு கோகுல் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி கோகுலுக்கு ஷில்பா அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் மனமுடைந்த ஷில்பா தன் இரு குழந்தைகளுக்கும் இரவில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அதே ஐஸ்கிரீமை அவரும் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மறுநாள் காலை சில்பாவின் தந்தை வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஷில்பா மற்றும் இரு குழந்தைகள் படுக்கையில் பிணமாக கிடந்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.