இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்பும் மக்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுடைய வேலை, மருத்துவம், குடும்பத்தினரோடு வசிக்க, சுற்றுலா, வர்த்தகம் என பல தேவைகளுக்காக அங்கே செல்கிறார்கள். விசா வசதியை இந்தியாவில் உள்ள தூதரகங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா குடியேற்றம் அல்லாதோர் விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. H-1B கட்டணம் $460ல் இருந்து $780 ஆகவும், L-1 கட்டணம் $460லிருந்து $1,385 ஆகவும், EB-5 விசா $3,675லிருந்து $11,160 ஆகவும் அதிகரிக்கப்படும். புதிய விசா கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று பைடன் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.