இந்த நிலையில் எந்த இடத்தில் ஓட்டுக்கள் குறைந்தாலும் அந்த இடத்திற்கு போனவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடந்தது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நம் கூட்டணி கட்சியினர் தோளோடு தோளாக நீண்ட காலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்பு உணர்வோடு கலந்து தொகுதி பங்கீடு செய்துள்ளோம். சில தொகுதிகளை பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம்.

நாட்டின் எதிர்காலம் தான் முக்கியம் என்பதால் வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களை சேர்ந்த சட்டசபை தொகுதிகளில் ஓட்டுக்களை கூடுதலாக பெற்றுத் தரும் பொறுப்பு உள்ளது. ஒரு சட்டசபை தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் அதற்கு அந்தந்த மாவட்ட செயலரும் பொறுப்பு அமைச்சரும் தான் பொறுப்பு. எந்த இடத்தில் ஓட்டு குறைந்தாலும் அந்த இடத்திற்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடுகின்றேன். இதனை கண்டிப்போடு சொல்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.