ஜப்பான் நாட்டின் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருப்பவர் புமியோ கிஷிடா. இவருக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இவருக்கு சைனஸ்சிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பாதிப்பு கடுமையானதால் அவரால் சுவாசிக்க இயலவில்லை.

இதனால் மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். இது குறித்து ஜப்பான் தலைமை மந்திரி சபை செயலர் ஹீரோகாசு மாட்சுனோ கூறியதாவது “பிரதமர் நலமாக இருக்கிறார். நாளை வழக்கம்போல் பணிக்கு திரும்பி விடுவார்” என கூறியுள்ளார்.