வெங்காயம் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, என்சிசிஎஃப் அமைப்பின் கீழ், டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெங்காய விலை பற்றி மகாராஷ்டிர அமைச்சர் தாதா பூசே பேசியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

‘அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்க முடியாதவர்கள், சில மாதங்கள் வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால், ஒன்றும் கெட்டுவிடாது’ என கூறியுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.