சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி பிரபு நகரில் மதன் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாரதி(16) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சாரதி பத்தாம் வகுப்பு படிப்பதால் அவருக்கு ஆசிரியர்கள் கூடுதல் வீட்டு பாடங்கள் கொடுத்ததாக தெரிகிறது. அதனை மாணவன் சரியாக எழுதாமல், படிக்காமலும் இருந்து வந்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் மாணவனை கண்டித்தனர். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். அப்போது பெற்றோர் பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை சற்று கஷ்டமாக தான் இருக்கும். அதனை பொறுத்துக் கொண்டு பள்ளிக்கு செல் என அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனாலும் பள்ளிக்கு சென்றால் வீட்டு பாடங்களை ஏன் படிக்கவில்லை என ஆசிரியர்கள் திட்டுவார்கள் என அச்சத்தில் இருந்த மாணவன் தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.