பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் ஷாருக்கான். இவரைக் குறித்து பிரபல நடிகை ஜூஹி சாவ்லா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஷாருக்கான் சினிமாவிற்கு வந்த தொடக்கத்தில் அவர் தங்குவதற்கு தனி வீடு கிடையாது என்றும் சொந்த ஊரான டெல்லியில் இருந்து தான் ஷூட்டிங் வருவார் என்றும் கூறியுள்ளார்.

எந்த தயக்கமும் இன்றி அனைவரிடமும் பழகுவார் என்றும் இரண்டு முதல் மூன்று ஷிப்ட் வேலை செய்வார் என்றும் குறிப்பிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கருப்பு ஜிப்ஸி கார் வாங்கினார் என்றும் ஆனால் அது அவரிடம் இருந்து போய்விட்டது, அப்போது மனம் உடைந்து சூட்டிங் ஸ்பாட்டில் காணப்பட்டார் என கூறினார்.