மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சிறு, குறு விவசாயிகள் மானியத்தை பெற்று பயனடைய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். உழவு, விதைப்பு, அறுவடை, பண்ணைக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.

நன்செய் விவசாயிக்கு 2.5 ஏக்கரில், ஏக்கருக்கு ரூ.250 வீதம், ரூ.625 வரை ஆண்டுக்கு ஒருமுறையும், புன்செய் விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதம் ரூ.1,250 வரை ஆண்டுக்கு ஒருமுறை மானியம் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.