நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இனிய ஆண்டுக்கு 8000 ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மூன்று தவணையாக வழங்கி வந்த நிலையில் இன்னும் 2000 ரூபாய் அதிகரித்து இனி நான்கு தவணையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரை பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.