மத்திய,  மாநில அரசுகள் விவசாயிகளினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ட்ரோன்களை வாடகை அடிப்படையில் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இந்த ட்ரோன்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 ட்ரோன்கள் 2023-24 மற்றும் 2025-26 க்கு இடையில் வழங்கப்படும். இதற்காக 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.